இது எனக்கு ரொம்ப நாளா யாரையாவது கேக்கணும் நு தோணும். நாய் நு மட்டும் இல்ல, வேற எதுவானாலும், அந்தந்த விலங்கு மனசுல நம்ம என்னவா தோனுவோம்? சிலசமயம் நாய் நம்மள பாத்தா அப்பிடியே சொந்தக்காரங்கள பாக்கராமேரி பாத்துகுனே இருக்கும், சில சமயம் வந்து மோந்து பாக்கும். சிலசமயம் கொலைக்கும். சிலசமயம் பின்னாடியே வரும். மனுஷன் psychology இருக்கவே இருக்கு நாயிங்க psychology யாரவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா ப்ளீஸ். லேட் ஆனா வீட்டுக்கு வரவே முடியல. எந்த நேரத்துல எந்த நாயி புடுங்கும் நு தெரியல. மொத்ததுல, நாய்க்கு நாம மனுஷங்க நு தெரியுமா? தெரியாதா? அப்பறம் இன்னுரு டவுட். நாய்க்கு கடவுள் பத்தி எதாவது தெரியுமா? பேய பாத்தா நாய் கொலைக்கும் நு சொல்லுவாங்க? அப்போ நாய்க்கு பேய தெரியும் போது கடவுள தெரியாதா? அட, நான் இங்க பகுத்தறிவு பேசலப்பா. அத நல்லாபுரிஞ்சிக்கணும்.
Thursday, January 8, 2009
எல்லாருக்கும் வணக்கம் , இது என்னோட ரெண்டாவது blog. முதல் blog வெட்டியா இருந்தப்போ ஆரம்பிச்சது. இப்போ இந்த blog பயங்கர வெட்டியான அப்பறம் ஆரம்பிக்கறது. இந்த blog ல பயங்கரமான விஷயம் எல்லாம் இருக்காது.எதோ நம்ம அறிவுக்கு எட்டின சில பல விஷயம் பத்தி ஏதாவது எழுதுவேன். சேரி இத படிக்கும் போதே நான் எவ்ளோ வெட்டி நு தெரிஞ்சிருக்குமே?
Subscribe to:
Comments (Atom)